பெயர் கேட்ட பொழுது

சமாதான புரம்
அவருக்கு சமான புரம்
ஆராக்யா புரம்
அவருக்கு ஆரோக்கி
ஆட்சி மடம்
அவருக்கு ஆட்சே ஆட்சே
சென்னல்பட்டி
அவருக்கு சென்னேல்
சிவலப்பேரி
அவருக்கு லப்பேரி
அரியகுளம்
அவருக்கு அர்ர்ரியகுளம்
பாளை மார்கெட்
அவருக்கு மாருட்டு

ஊருக்கு
செல்லப்பெயர்
வைப்பதில்
அவருக்கே
முன்னுரிமை..

உங்க பேரு என்னண்ணே
என்று கேட்கும் போது
ஒரு நிமிசம் தம்பி என்று
விரு விரு என்று
முன்னே சென்றவர்
என்னப்பா ஏய்
ஏறி வா டே
ச்சும்மா படில நிக்க
என்றவாறு
டிக்கட் கிழிக்க
ஆரம்பித்துவிட்டார்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (2-May-15, 7:59 pm)
பார்வை : 143

மேலே