சிறகு முறிந்த பட்டாம்பூச்சிகள்

ஐம்பதுகள் வளையாததால்
ஐந்தில் வளைந்தேன்!
புத்தகங்களுக்கு பதிலாய்
செங்கற்கள் என்முதுகில்!
வகுப்பறை முடிவின்
ஒவ்வொரு மணிச்சத்தமும்
இடியாய் வந்துத்துளைக்கும்!
கனவுகளோடு திரிந்தவனுக்கு
கண்ணீரே பரிசாய்!
இளமையில் கல்வி
கானல்நீராய் எனக்கு!
செங்கற்சூளையில்
கனன்று கொண்டிருக்கிறது
அனலோடு என் புத்தகங்களும்!

எழுதியவர் : நா.காமராசன் மண்டகொளத்தூர (3-May-15, 10:08 am)
பார்வை : 71

மேலே