பதின் பங்கி - எழுதியவர் Dr V K Kanniappan
தவத்திரு பாம்பன் சுவாமிகள் திருவலங்காரத் திரட்டு என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் தமிழ் இலக்கியத்தில் பயின்றுவரும் பா, பாவினம் யாவுக்கும் எடுத்துக்காட்டுச் செய்யுள் அளித்திருக்கிறார்.
அதில் இப்பாடல் ஒன்று
ஒரே பாடல் பத்தாகப் பிரியும். பதினான்கு சீர் விருத்தம் தனித்தனி பாடல்கள் பத்தாகப் பிரிந்து மொத்தம் 11 பாடல்கள் உள்ளன. இது ’பதின் பங்கி’ எனப்படும்.
பதினான்கு சீர் விருத்தம்
நாத மேவிய நாம வேதனே
...நார ணாவென ஓதியே
......நாடு வாருனைப் போற்று வார்தினம்
.........நம்பி யேபதம் சூடுவார்
ஏத மற்றநின் நாமம் ஓதுவார்
...ஈர வார்த்தைகள் கூறுவார்
......ஏட விழ்ந்திடும் பாடல் பாடுவார்
.........எம்பி ரான்நினை வாழ்த்துவார்
சோத னைதமைத் தூள்ப டுத்திடு
...தூர மாய்உனைக் காண்கிலார்?
......தோட விழ்மலர்ப் பாத நாயகா
.........சும்மா வென்றுனைச் சொல்வதோ?
போத மார்ந்திடு புத்தி நல்கிடு
...பூர ணத்தினைக் காட்டிடு
......போடு போடெனப் பூக்க வைத்திடு
.........பொம்மென் றேவளம் பொங்கவே!
1. கலிவிருத்தம்
நாத மேவிய நாம வேதனே
ஏத மற்றநின் நாமம் ஓதுவார்
சோத னைதமைத் தூள்ப டுத்திடு
போத மார்ந்திடு புத்தி நல்கிடு.
2. வஞ்சி விருத்தம்
நார ணாவென ஓதியே
ஈர வார்த்தைகள் கூறுவார்
தூர மாய்உனைக் காண்கிலார்?
பூர ணத்தினைக் காட்டிடு.
3. கலிவிருத்தம்
நாடு வாருனைப் போற்று வார்தினம்
ஏட விழ்ந்திடும் பாடல் பாடுவார்
தோட விழ்மலர்ப் பாத நாயகா
போடு போடெனப் பூக்க வைத்திடு.
4. வஞ்சி விருத்தம்
நம்பி யேபதம் சூடுவார்
எம்பி ரான்நினை வாழ்த்துவார்
சும்மா வென்றுனைச் சொல்வதோ?
பொம்மென் றேவளம் பொங்கவே!
5 எழுசீர் விருத்தம்
நாத மேவிய நாம வேதனே நம்பி யேபதம் சூடுவார்
ஏத மற்ற நின்நாமம் ஓதுவார் எம்பி ரான்நினை வாழ்த்துவார்
சோத னைதமைத் தூள்ப டுத்திடு சும்மா வென்றுனைச் சொல்வதோ?
போத மார்ந்திடு புத்தி நல்கிடு பொம்மெ னவளம் பொங்கவே!
6 எழுசீர் விருத்தம்
நாத மேவிய நாம வேதனே
…..நார ணாவென ஓதியே
ஏத மற்றநின் நாமம் ஓதுவார்
…..ஈர வார்த்தைகள் கூறுவார்
சோத னைதமைத் தூள்ப டுத்திடு
…..தூரமாய் உனைக் காண்கிலார்?
போத மார்ந்திடு புத்தி நல்கிடு
…..பூர ணத்தினைக் காட்டிடு
7. எழுசீர் விருத்தம்
நாடு வாருனைப் போற்று வார்தினம்
…..நம்பி யேபதம் சூடுவார்
ஏட விழ்ந்திடும் பாடல் பாடுவார்
…..எம்பி ரான்நினை வாழ்த்துவார்
தோட விழ்மலர்ப் பாத நாயகா
…..சும்மா வென்றுனைச் சொல்வதோ?
போடு போடெனப் பூக்க வைத்திடு
…..பொம்மெ னவளம் பொங்கவே!
8. அறுசீர் விருத்தம்
நார ணாவென ஓதியே நம்பி யேபதம் சூடுவார்
ஈர வார்த்தைகள் கூறுவார் எம்பி ரான்நினை வாழ்த்துவார்
தூர மாய்உனைக் காண்கிலார்? சும்மா வென்றுனைச் சொல்வதோ?
பூர ணத்தினைக் காட்டிடு பொம்மெ னவளம் பொங்கவே!
9 எழுசீர் விருத்தம்
நாத மேவிய நாம வேதனே
...நாடுவாருனைப் போற்று வார்தினம்
ஏத மற்றநின் நாமம் ஓதுவார்
...ஏடவிழ்ந்திடும் பாடல் பாடுவார்
சோத னைதமைத் தூள்ப டுத்திடு
...தோடவிழ்மலர்ப் பாத நாயகா
போத மார்ந்திடு புத்தி நல்கிடு
...போடுபோடெனப் பூக்க வைத்திடு.
10. பதின்சீர் விருத்தம்
நாத மேவிய நாம வேதனே
...நார ணாவென ஓதியே
......நம்பி யேபதம் சூடுவார்
ஏத மற்றநின் நாமம் ஓதுவார்
...ஈர வார்த்தைகள் கூறுவார்
......எம்பி ரான்நினை வாழ்த்துவார்
சோத னைதமைத் தூள்ப டுத்திடு
...தூர மாய்உனைக் காண்கிலார்?
......சும்மா வென்றுனைச் சொல்வதோ?
போத மார்ந்திடு புத்தி நல்கிடு
...பூர ணத்தினைக் காட்டிடு
......பொம்மென் றேவளம் பொங்கவே!
இந்த வகை அமைப்புக்குப் பங்கி என்று பெயர்.
திரி பங்கி, சதபங்கி , நவபங்கி, பதின் பங்கி எனப் பலவகை உண்டு.
125 பாடல்களாகப் பிரியும் பாம்பன் சுவாமிகளின் பங்கியும் உண்டு
===============================================
பின் குறிப்பு: இது Dr. வ.க .கன்னியப்பன் அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு kavithai/243864-ல் கருத்திடவும். (இங்கு கருத்திட இயலாது)