சொல்லிவிட்டு போ

ஒரு மேகம் எனைத்தழுவி
குளிர வைத்து போகின்றதோ ..
சிறு தூறல் எனை நனைத்து
இதழ் தடவி வருடுகின்றதோ ..

உந்தன் மௌன மொழியிங்கு
பாடும் கீதமதில்
சிறு கிறக்கம் வருகின்றதோ ..
எந்தன் காதல் தாகமது
உந்தன் பார்வையிலே
தீர்ந்து போகின்றதோ !

நீயும் எனதாக
வானம் வசமாகி
என்னுள் நிறைகின்றதோ ..
ஒரு பூவின் வாசம் இங்கு
உயிரில் இறங்கி எந்தன்
உணர்வில் கலக்கின்றதோ !

மலர் வனத்தில் பறக்கும் வண்டு
உந்தன் கண்கள் என்றானதோ..
நெஞ்சில் வந்து வந்து அடிக்கும்
அலைகள் என உனது
நினைவு ஆகின்றதோ !

நீ வந்து தரும் காட்சி
போதும் போதும் என
உள்ளம் கூத்தாடுதோ !
உன் பாத மலர் வலிக்க
நின்றாலும் கூட
என் கால்கள் வீங்கிடுமோ !
இல்லை..
என் இதயம் தான் தாங்குமோ !
நீ..
என்று வந்தாலும்
என்னுள் கலந்தாலும்
இன்பம் சேர்ந்திடுமே..
நம்
வாழ்வு செழிப்பாகுமே !

ஆசை அல்ல இது
ஆவல் இல்லை இது
என் உயிரின் ஒலிதான் ..
இது அன்பே ..!

இது நின்று போவதும்
தொடர்ந்து கேட்பதும்
உனது கைகளிலே..!
உன் விருப்பம் எதுவென்று
தெரியும் வரையில் என்
நெஞ்சில் அமைதி இல்லையே!!
அதை
சொல்லிவிட்டுப் போ..
என் உயிரே!

எழுதியவர் : கருணா (4-May-15, 12:45 pm)
Tanglish : sollivittu po
பார்வை : 224

மேலே