மனதின் துணை

மனதின் துணை

உடல்
உள்ளம்
உயிர் கலந்த
உன் துணையே
உனக்கழகு . . . .

நீர்
நிலம்
நிழல் போல
நின் மனையாளுடன்
நீ பழகு . . . .

ஊண்
உயிர் பிரிந்திடினும்
உலகமே வெறுத்திடினும்
உன் மனதோடு
மலர்ந்திருக்கும்
மாதர் குல திலகமது . . .

ஏடதனில்
எழுதி வைத்தும்
பாட்டதனில்
பாடி வைத்தும்
போற்றிப் புகழ
தெய்வம் அது . . . .

உன்
கண்ணிரண்டின்
இமையாக
காலமெலாம் காவல் நிற்கும்
கண்கண்ட தெய்வமது . . . .

காட்சியிலும்
பிழை இருக்கும். .
காதலிலும்
பிரிவிருக்கும் . . .
கரம் பிடித்த உன்
மனையாளின்
காலில் கூட கறையுமுண்டோ.

ஆண்டு பல
கடந்திடினும்
ஆயிளும் தான்
நீண்டிடினும் . .
ஆதவனும் சுருங்கிடினும்
அவள் அன்பதிலே
குறை வருமோ . . . .

தீயினிலே
வெந்திடினும்
நீரினிலே
கரைந்திடினும்
உன்
நினைவோடு
ஒன்றிணைந்த
ஓருயிரும் அவள் தானே . . .

இறைவனின்
பிரதி தாய் என்றால்
இருவரின் நிழலும்
உன் தாரமன்றோ . . .

இது போல
எழுதிடவும்
இன் முகமாய்
பாடிடவும்
இல்லாளின் இணையாக
இன்னுமோர் இணையுமுண்டோ . . .







*=*=*=*=*

எழுதியவர் : மல்லி மணியன் (5-May-15, 3:47 pm)
Tanglish : manathin thunai
பார்வை : 576

மேலே