கொடுமையான இனிமை - 12173

பனித்துளிகளே எழுத்துக்கள்
பட்டுப்பூக்கள் காதல் கடிதங்கள்
ஐ லவ் யூ என்று வரும் கீதங்கள்
ஆயுளுக்கும் இனித்திருக்கும் மெட்டுக்கள்

இமை திறந்தே மனசு பேசும்
இதயம் திறந்து தென்றல் வீசும்
இறகு என்பது இருவர் நினைவு
இரவு என்பது விழிக்க பொழுது

விழியில் வந்ததேன் செவ்வானம்...?

வெட்கம் கொண்டதேன்
ஒரு மனம்..?!

வினாக்கள் தொடுத்து
தென்றல் குத்தும்.....

விடையாய் நினைவு
மீண்டும் வருடும்...

காதல்-ஒரு கொடுமையான
இனிமை

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-May-15, 6:43 pm)
பார்வை : 137

மேலே