காணாமலும் தெரிகிறாய்

இமைகள் இறுக்கிக் கொண்டு
இரைந்திடும் மழை தாளத்தை
காதுகளால் பருகியபடி
மயங்கி கிடக்கிறேன் ......

உள்ளங்கால்களில் ஊறும் மயிலிறகாய்
உன் நினைவுகள்......
திடுக்கிட்டு திறக்கிறேன் கண்களை....

காற்றெல்லாம் நீ .....

காணாமலும் தெரிகிறாய் .......

எழுதியவர் : மேரி டயானா (6-May-15, 12:47 pm)
பார்வை : 90

மேலே