தமிழனே உன் தன்மானம் தழைக்கட்டும்

யானை வளர்த்த சேரனன்றோ நீ!
ஏன்?இப்பொழுது மட்டும்?
புண்ணினைத் தின்று நக்கி விழுங்கும்
ஈனப் பிறவியானாய்?

வறண்டதடா! பூமியெங்கும்
ரத்த ஆறாய்...!
ஒழிந்ததே மானம்?
நீ உரிமை இழந்ததால்...!

வீரனை வளர்த்த பாண்டியனன்றோ நீ!
உனை ஈண்ட களவாணிகள்
எச்சிலால் வளர்த்தார்கள்
கூண்டிற்குள் அடைபட்டது போதும்
கூண்டை நொறுக்கி வெளியே வா!

சோறுடைத்த சோழனன்றோ நீ!
உரிமையோடு போராடு
இழந்ததையெல்லாம் மீட்க...
எரிமலையாகப் பொங்கிடு
பகையை விரட்டி குகைக்குள்ளே அடை!

நிமிர்ந்து நில்!
ஊழியஞ் செய்தாய்
வரி கட்டினாய்
இனியேன் மெளனம்
தயங்காதே !எழுந்திடு!
உன் தோள்களை உயர்த்தி ஆளடா!
ஆண்டான் அன்றோ நீ!!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (6-May-15, 1:16 pm)
பார்வை : 350

மேலே