எலியும் பூனையும்
ஒரு பூனை சாராயப் பானைக்குள்
விழுந்து விட்டது.அதனால் வெளியில்
வர முடியவில்லை.அங்கு வந்த எலியிடம்
அது சொன்னது,ஒரு கயிறை மட்டும் எடுத்து
ஒரு முனையை என்னிடம் கொடுத்துவிட்டு
மறுமுனையை நீ கெட்டியாகப் பிடித்துக் கொண்டால்
நான் வெளியே வந்துவிடுவேன்.
வெளியே வந்ததும் உன்னை சத்தியமாகக்
கொள்ள மாட்டேன்.எலியும் சரியென்று சொல்லி
அவ்வாறே செய்தது.வெளியே வந்த பூனை
உடனே எலியை விரட்டியது.கொடுத்த வாக்கை
மீறலாமா என்று எலி கேட்டபோது பூனை சொன்னது
குடி வெறியில் நான் ஆயிரம் சத்தியம் செய்திருப்பேன்
அதை நீ நம்பலாமா??