கணினி கணினி

இணையத்தில் உன்னை பார்த்தது..
இதயத்தில் அன்றே சேர்த்தது
முதல் முறை காதல் தொட்டது..
முன் பிறவியில் கூட வாழ்ந்தது
அன்பே நீ..என் கூகிள் நீ ..
வைபரும் நீ ..வாட்சப்பும் .. நீ
என் செல்லில் எல்லாம் .. நீ!
உடல் செல்களில் எல்லாம் நீ!
உன் ஆசை முகத்தை
டவுன்லோட் செய்ய வசதியில்லை ..
என் காதல் அதனை
அப்லோட் பண்ண துணிவுமில்லை
ஒரு ஈ-மெயில் போதும்
என்னை அட்டேச் செய்திட வாய்ப்பிருக்கும்
நீ டெலிட்டே செய்திட
ட்ராஷில போகாமல் பார்த்துக் கொள்ளும் !
இத்தனை ஆசையை வச்சிருக்கும் என்னை
ஷட் டவுன் பண்ணாதே!
ஓவரா நான் போவதா தெரிஞ்சா
என்னை ஒரு மௌஸா மாற்றாதே !
கணினி..கணினி.. கணினி நீ .
சரியாய் ..என்னைக்
கணி நீ.. கணி நீ .. கணி நீ!