துளக்கில எம்நிலை துணைவரல் இல்லையே - கலிவிருத்தம்

தனிப்பெயல் தண்துளி தாமரை யின்மேல்
வளிப்பெறு மாத்திரை நின்றற்(று) அரசினர்
அளிப்பவாம் பெறுமில வசங்களும் மற்றவை
துளக்கில எம்நிலை துணைவரல் இல்லையே! – எசேக்கியல்

பொருளுரை:

ஆட்சி செய்யும் அரசாங்கம் விலையில்லாப் பொருட்கள் என்று எங்களுக்கு அளிக்கும், அளித்து நாங்கள் பெறும் இலவசங்கள் எங்கள் வாழ்க்கை நிலையை ஒளிபொருந்தியனவாகச் செய்யவில்லையே என்றும், எங்கள் வறுமை நிலையை உயர்வு பெற உதவுவதாக இல்லையே என்றும் வாக்குரிமை பெற்ற ஒவ்வொரு குடிமகனும் ஏக்கத்துடன் தம் நிலை விளக்கம் தருவதாக உள்ளது.

மக்களின் நிலை குளிர்ந்த மழையினது ஒரு துளியானது தாமரை இலையின் மேலே காற்று வந்து வீசும் வரை சிறுபொழுது மட்டுமே நிலைத்து நின்றாற் போன்றது என்றும் இப்பாடலாசிரியர் எசேக்கியல் காளியப்பன் கூறுகிறார்
.
மற்று - அசை; அவை - யாம் பெறும் இலவசங்கள்;

எம் நிலை துளக்கில - எமது நிலையை ஒளிபொருந்தியனவாகச் செய்யவில்லை

அதை வைத்து எந்த வகையிலும் எங்களுக்கு (துணை - உதவி) உதவியாக இல்லை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-15, 9:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே