ஆப்கன் மக்கள் கூட்டத்தினர் மன நலம் பாதித்த பெண்ணை கல்லால் அடித்து கொன்றது தவறு என்று ஆப்கான் நீதிமன்றம் கூறிவிட்டன

ஆப்கன் மக்கள் கூட்டத்தினர் மன நலம் பாதித்த பெண்ணை கல்லால் அடித்து கொன்றது தவறு என்று ஆப்கான் நீதிமன்றம் கூறிவிட்டன....

மார்ச் - 19 அன்று வியாழக்கிழமை 17 வயதில் இருந்து மனநலம் குன்றிய சுமார் 27 வயது பெண்ணை கல்லால் அடித்தே கொன்றார்கள் ஆப்கான் மக்கள் கூட்டத்தினர்...

ஆப்கானிஸ்தானில், குரானை எரித்ததாகக் கூறி மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அடித்துக் கொன்று, உடலை எரித்து ஆற்றில் வீசிய நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் புனித நூலான குரானை எரித்ததாக பர்குந்தா என்ற பெண்ணை, நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் சிலர் அடித்துக் கொன்றனர். பிறகு அவரது உடலை தீயிட்டு எரித்து ஆற்றில் வீசினர்.

இந்த சம்பவம் தொடர்பான 49 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 4 பேருக்கு மரண தண்டனையும், 8 பேருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 18 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் குற்றத்தைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தவர்கள் என்று 19 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆக வேடிக்கை பார்ப்பதும் குற்றம்....கல்லெறிந்து கொன்றவர்களுக்கும் தண்டனை....முன்னின்று கொன்றவர்களுக்கு மரண தண்டனை....

தீர்ப்புகளை வரவேற்கலாம்...மரண தண்டனை தவிர....!

இதற்கு காரணம் மத அடிப்படைவாதமே.....மத சீர்திருத்தமும் வேண்டும்...சுதந்திரம் / சமத்துவம் / ஜனநாயகம் கொண்டு வரப்பட வேண்டும்...

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் போரினால் கடும் பாதிப்புக்கு உள்ளான பழங்குடி இன மக்கள் சமூகம் இதுபோன்று கடும் தண்டனைகள் இயற்றப்படுவது சகஜமான ஒன்று தான்....இதற்கு இஸ்லாமிய மதம் தான் காரணம் என்று பார்க்க முடியாது.....

பழங்குடி இன சமூக மக்களை பொருளாதார / பண்பாட்டு ரீதியாக முன்னேற்றாமல் பொத்தம் பொதுவில் குற்றம் சுமத்துவது மனிதத்தன்மையற்ற செயல் என்றே கருதலாம்....

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (7-May-15, 1:56 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 86

சிறந்த கட்டுரைகள்

மேலே