சுவடுகள்

என்னவளே !
உன் சுவடு பதிந்த ஆற்றங்கரை ,
என் சுகமான படுக்கையறை ...

நிலவொளியில் நின் கரம் பிடித்து ,
நான் சொன்ன வார்த்தைகள் ,
என் காதோரம் பாடுதடி ..
தாலாட்டாய் கேட்குதடி ...

எட்டாத நிலவெனவே
எங்கேயோ போனாயே ..
கிட்டத்தில் நீ இருந்தால்
எத்தனை மகிழ்ச்சியடி ..

எனை தேடித்தான் வருவாயோ ?
என் தேவதையே !
பாடிகொண்டே இருக்கிறேன் பல ராகங்களை ..
பல்லவியாய் நீ வருவாயோ ?

உன் பாத சுவடுகளின் பின்னே
நான் பயணிக்கிறேன் தினமும் ..
தூரத்தில் நீ சிரித்தாய்..
என் துக்கங்களும் பறந்தோடின ...

கனவுகளில் மட்டுமே காண்கிறேன்
இக்காட்சியை ...
என்று வருவாயோ ? நிஜத்தில் ..
என் இனிய வாழ்க்கை துணையாய்
கரம் கோர்க்க ?

எழுதியவர் : சாருமதி (7-May-15, 12:59 pm)
Tanglish : suvadukal
பார்வை : 68

மேலே