நிழல் யுத்தம்
அடிக்கடி சொல்வாய் !
உன்னுடன் வாழமாட்டேன் !
உன் வழி சேரமாட்டேன் என்று !
செவிக்கது புளிப்பைத்தரும் !
பின்னர்............
கொஞ்சம் துவண்டு,
நெஞ்சம் துவட்டி எழுவேன் !
இன்றைக்கெல்லாம்..........
சொல்வதில்லை நீ எதுவுமே !
என்னாலோ !
வெல்ல முடிவதில்லை வேதனையை !
ஒருவேளை?
மெய்ப்படுத்திப் போய்விட்டாயோ?
ஆதங்கத்தில் இயம்பியதை !!