இசையின் விசை

என்னவனே
நான் இசையின் தனிமையில் காத்திருப்பது
நாம் இருவரும் சேர்ந்து
ரசிப்பதற்காக.............
காற்றில் ததும்பி வந்த
உன் இசை கேட்டு
என் இதயம் துடிக்கிறது
உன் அருகில் வர..........
மரத்தின் நிழலில் இருக்கும் நான்
உன் இதய குடையில்
மழைத்துளி இசையாக
அமர்வது எப்போது...........
இசையோடு காத்திருக்கிறேன்
இமைக்காமல் உனக்காக.............