படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - யாசகியாய் நான்

==மார்பீந்த வக்கற்றவளின் மகளாய் பிறந்த
வாசமற்ற மல்லி நான்!!
==அவள் மடிமீது துயில்கொள்ளா - நடுத்தெரு
மீது துயில்கொண்ட நாதியற்றவள் நான்!!
==அவள் முந்தானை வாசங்காணாமல்
வாழும் வறியவள் நான்!!
==நித்தம்கோடி கனவை என்நெஞ்சில் சுமந்து
வீதிஉலா வரும் வக்கமற்றவள் நான்!!
==பாறை மனங்கொண்ட பட்டத்துராணியின்
பாவிமகள் நான்!!
==சாலையோரங்களில் சந்தம் பாடி நித்தம்
வேதனையை மறக்கும் சாதனைக்காரி நான்!!
==தொண்டையில் ஏனோ ஒரு அடைப்பு -காரணம்
அந்த தொட்டிலின் மீதான தவிப்பு!!
==மாலை மதியிடம் மடியேந்தும்
காலை கதிரவனிடம் கையேந்தும்
கடன்காரி நான்!!
ஏனோ ??
==அவள்விட்டுச் சென்ற இடத்தில் தினம்
வலம்வரும் யாசகியாய் மட்டுமே நான்!!

--------------------------------------------------------------------------------------------------------
இக்கவிதை என்னால் எழுதப்பட்டது
****** இரா.சுடர்விழி ******

எழுதியவர் : இரா.சுடர்விழி (8-May-15, 6:22 pm)
பார்வை : 253

மேலே