படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - உன்னை நினைத்து
உன்னை நினைத்து உன்னை நினைத்து
என்கண்ணா நிற்கக்கூட நிரந்திர இடம்
இல்லாத நிலைக்கு வந்துவிட்டேனே -என்கண்ணா
உன்னை நினைத்து உன்னை நினைத்து !
இறுதியில் வீதிக்கு வந்து விட்டேனே
என்கண்ணா உன்னை நினைத்து உன்னை
நினைத்து என் உடலில் உயிர்
இருந்தும் உறைந்து போன பிணமாகி
விட்டேனே - என்கண்ணா உன்னை தேடித்தேடி
தேய்ந்து விட்டேனே என்கண்ணா - உன்
வழி வந்து பின்வழி தொடர்ந்து
என்வழி மறந்து எதுவழி - என்று
அறியாமல் ஆகிவிட்டேனே - என் கண்ணா
உன்னை நினைத்து உன்னை நினைத்து !
உன்னை நினைத்து உன்னை நினைத்து
என்கண்ணா தெரு எங்கும் இசையிசைத்து
என்மனம் தவித்து ஆய்ந்து ஓய்ந்து
என் மனம் அழக்கழிந்து - நீ
இருந்தும் யாரும் - இல்லா அனாதை
போல் இம்மரத்தின் கீழ் - என்
மனம் மரத்துப்போய் உருக்குலைந்து அமர்ந்து
விட்டேனே - என் கண்ணா முப்பொழுதும்
உன்னை நினைத்து உன்னை நினைத்து !
மேற்க்கண்ட படைப்பு என்னால் எழுதப்பட்டது என்று உறுதி செய்கிறேன்
எழுதியவர் : ர.கீர்த்தனா
கைப்பேசி : 9884118785