பதியப்படாதவைகள் - டைரி
பதியப்படாதவைகள் - டைரி
=========================
அன்று அடுப்பத்திலிருந்த எல்லாமுமே
சில கால ஓட்டத்திற்குப் பின்னால்
பரஸ்பரம் காணுகிறபோது
யாதொரு பரிட்சய பாவமும் காண்பிக்காமல்
கடந்து போகக்கூடும்
அதொன்றும்
மனப்பூர்வமாகவோ இல்லையோ
வேதனிக்கின்ற
சில யதார்த்தங்களிலிருந்து
ஒளிந்து மாறவே இருக்கக்கூடும்
கனவுகளுக்கென்று
ஒரு விதி இருக்கின்றதுபோல்
காணுவதால் மாத்திரம்
ஏதும் சொந்தமாகி விடுவதில்லை
இதோ முடிவில்
நானும் புறப்படத் தயாராகிவிட்டேன்
எனக்கு முன்பே
கடந்துபோனவர்களின் வழிகளூடே
விடைதராத கேள்விகளை
சுயம் கேட்டுக்கொண்டு ம்ம்ம்ம்
ஆழமுள்ள பந்தங்கள்
தூரத்தை பயக்குமென்று
எங்கேயோ படித்திருக்கின்றேன்
அது சரியாக இருக்குமோ தெரியவில்லை
திரக்குப்பிடித்த பயணத்தில்
இடைக்கொரு
சாற்றல் மழைப்போல
விடைப்பெற்றும்
இடரும் உன்னல்களோடு
நடக்கத்தொடங்கிய வழி நெடுகில்
பொற்கனவின்
பூக்களெல்லாம் காத்துநிற்கும்
ஆம்,,,பொற்கனவின்
பூக்களெல்லாம் காத்துநிற்கும் ம்ம்ம்
அனுசரன்