கடிதங்கள்
கடிதங்கள்
"""""""""""""""""""""
தபால்காரனின் கவலையீன
தவறால் !
தொலைக்கப்பட்ட கடித சிதறல்கள்"""
காற்றின் தழுவலில்
மெய்மறந்து
பாதையோர வாய்க்காலில்
நீராடியது!
இந்த அசாதாரண நிகழ்வில்
காலையில் இருந்தே
மணியோசை காதில் விழ
காத்திருக்கும்!
கணவனை வெளிநாட்டில்
பிரிந்திருக்கும் காதல்
மனைவியும்!
வட்டி குட்டி போட
முயற்சிக்கும்,
முனைப்பை தடுக்க
மகனின் மணியோடரை
பார்த்திருக்கும்.
சதாரண ஏழை தாயும்!
குதுகலமான திருமண நிகழ்வில்
துர்ப்பாக்கிய செய்தியை
சுமந்து வராத"""
கடிதங்களை வாய்காலில்
கப்பல் விட்ட""
காக்கிச்சட்டைகாரனுக்கான
நன்றியும்!
பிரியத்துக்குரியவளின் கடிதம்.
காத்திருப்புக்களில்"""
கரைந்து காணாமல்போக""""
யாரோமூன்றாவது ஒருவரின்
மத்தியஸ்தத்திலும்!
உயிருக்கு போராடிய உறவின்
கடைசி நிமிட சத்தியத்திலும்,
விருப்பு வெறுப்பை
தியாகம் செய்து
கண்ணீருடன் கைபிடிக்கும்"""
துரதிஸ்டவசமான
நிமிடங்களும்!
இந்த யதார்தத்துக்கு
மாறுதலான,
சோகங்களும், சுகங்களும்,
பிரிதளும், இணைதளும்,
கடித தொலைவின்
""""""""""""""""""""""""""""""""""" மூலம்
ஓரு கறுப்பு பக்கத்தை
இயற்கை எற்கனவே
தீர்மாணித்துவிட்டது!!!
லாஷிகா
""""""""""""""""