அம்மா
உடலில்லாமல் வாழ்வது
சத்தியமானாலும், இவள்
உடனில்லாமல் வாழ்வது
சாத்தியமாகாது
எனத் தெரிந்துதான்
அன்னையின்
அணைப்புக்காக
அழுகின்றனவோ
அடிக்கடி மழலைகள்...
உண்மை தான்
அன்னை மடி
சாய்ந்தாலே
காணாமல் போகுது
கவலைகள்...
கடவுளாய் என்னை
சேவிக்கும் அவளுக்கு
தரவேண்டும்
அன்பு முத்தங்கள்...