படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - உன்னை நினைத்து
அன்பு மகனே என் ஆசை மகனே
தொலைந்த மாதம் என் மடியில்
நீ இருந்தாய் மாணிக்கமாய்.
இன்று நீ இல்லை யென்னுடன்
ஆனால் உனக்கு பிடித்த
இசையுண்டு என் மனதில்
அதைக் கொடுத்த
கருவியுமுண்டு என் மடியில்.
மாதம் பத்து உன்னை கருவில் சுமக்க வரம் கொடுத்த இறைவன்
மாதம் எட்டு உன்னை மடியில்
சுமக்க வரம் கொடுக்கவில்லை.
அன்று என் கைகள் கோர்த்து கொண்டிருந்தேன்
உன்னையும் சேர்த்து
இன்றும் என் கைகள் கோர்த்து கொண்டிருக்கிறேன் உன்னைத் தொலைத்ததை மறந்து.
நீ முதன்முதலில் பார்த்து சிரித்த பொம்மை என் எதிரில்
அதை மட்டுமே உற்று பார்த்து
ஊமையாகி விட்டேன்
உன் பிஞ்சு பாதங்கள் பட்ட மண்ணில் என் பாதங்கள் வைத்து.