அம்மா

அம்மா
"""""""""
உலகத்தின் உயரிய
உன்னதம்!
ரத்தத்தையும் ,சதையையும்,
குழைத்தெடுத்து,
உணர்வையும் உயிரையும்
அதில் நிறுத்தி!
வயிற்றில் சுமைதாங்கி!
வலிகளையும்,வதைகளையும்,
தினம் விரும்பி!
பிரசவம் என்ற விழாவில்
என்னை இந்த உலகிற்கு
அறிமுகப்படுத்திய,"""
என் அன்புத்தாய்!!!
இன்று இல்லாத போதிலும்,
எங்களுடன் வாழ்வதாகவே,
உணர்கிறேன்!
லாஷிகா
"""""""""""""