அன்பை தவிர வேறொன்றுமில்லை
கட்டியவரை விட்டு பிரிவதை
தாங்கிடவே முடியாதவள்....
உன் அப்பாவென்று
பேச்சில்கூட மொத்தமாய்
தாரை வார்த்துவிடுகிறாள்
பிள்ளைகளுக்காகவே.....
சில வருடங்கள்
வெளிநாடுகளிலும்....!!
கோபத்தோடு
சில மணி நேரங்கள்...
சில நாட்களென...
பேசாமலிருந்தாலும்....
அவளுக்கோ வந்த
கோபம் பெரிதாய்
தெரியவில்லை...
பிள்ளைக்கு முன்னால்....!!
விடுதி உணவு
எவ்வளவு மோசமாக
இருந்தாலும் சாப்பிடும்நிலை
பிள்ளைக்கு...
எத்தனை சுவையான
உணவும் பிடிக்காதநிலை
அம்மாவுக்கு....!!
சண்டையோடு
சாப்பிடாத நாட்களில்...
அடித்து தொண்டையில்
இறங்க வைப்பாள்....
இல்லையேல்.....
அழுது தொண்டையிலேயே..
சிக்க வைப்பாள்....!!