என் மரணக் காற்று

வாளெடுத்து வீசுகிறேன்,
வெட்டுப் பட்டும்
காயமின்றிக் கடக்கிறது காற்று,
பலூனுக்குள்
அடைத்து வைக்கப்பட்ட போதும்..
எந்தத் துளையும் இன்றி
வெளியேறிவிடுகிறது அது,
மின் விசிறி கொண்டு
இழுத்து வந்தாலும்...
வியர்வை துடைத்துப் பொய்விடுகிறது..
அக்கணமே,
எனக்குள் உயிராக,
சற்றுக் காலமாய் நின்றுவிட்ட
அக் காற்றை மட்டும்
எனக்குள்ளேயே...
எப்படி நிறுத்தி விடுவேன் நானும்..!?