புலம்பிய சிலம்பு
கைபிடித்த கண்ணகியை
கண்ணீரில் மிதக்கவிட்டான்
மனதிற்குப் பிடித்த மாதவியுடன்
மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்
எல்லாம் இழந்து வெறுங் கையனாக
திரும்பிவந்து நின்ற போது
காசிற்காக காற் சிலம்பை
விற்றுவரத் தந்தாள் கற்புக்கரசி
பொற் கொல்லன் பொய்யில்
தேரா மன்னன் தீர்ப்பில்
களவுப் பழியேற்று மாண்டான்
பாவம் ஒன்றுமறியா கோவலன்
உண்மையறிந்து மன்னவனும் மாண்டான்
நீதி செத்த பின்
மன்னன் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன ?
கணவனை இழந்தவளுக்கு காட்டுவது இல்
என்று எழுதினான் காவியக் கவிஞன் இளங்கோ !
___கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
