கானகத்து நடேசன்

வான் கவியும் சுருள் ஜடைகளாய் கார் முகில்களிலே
கானகத்து கிளைகளிலே முரசு கொட்டும் காற்றினிலே
கங்கை பனித்துளியென துமி தூவும் சாரல் மழையினிலே
எங்கோ சலசலக்கும் காட்டாற்று சலங்கை ஒலியினிலே
மருண்டு தனியாக துள்ளி குதித்தோடும் ஒற்றை மானிலே
தூரத்து மலைச் சரிவில் மூண்டெரியும் காட்டுத் தீயினிலே
அண்ட பெருவிளியன்ன கானகத்து காரிருளினிலே
பேரண்ட பெருவிளியில் ஆடும் நடேசனை கண்டேனே !