நிழலே நிஜம்

என்
மனமே
உன்னை பார்த்த வேளையில்
என் நிலை மறந்த நான்
இன்று என்னையே மறந்து விட்டேன்

ஒரு பொழுதும்
இமைக்காத என் கண்கள்
இப்பொது
இமையோடு மூடிகொண்டது
காரணம்
உன் முகம் தெரிவதால்

என் கனவில் பிடிக்கும் என்று
சொன்ன நீ
நிஜத்தில் பிடிக்க வில்லை என்றாய்

உன் நிழலை கூட
நான் கீழே விட வில்லை

நிலவு போல் முகம் இருந்தும்
சூரியன் போல ஒளி வீசுகிறாய்

அதனால் தானோ
அந்த நிழல் (சூரிய ஒளியில்) மட்டுமே இன்று நிஜமானது.

எழுதியவர் : (12-May-15, 1:05 pm)
Tanglish : nilale nijam
பார்வை : 88

மேலே