காலம் கனியும்
காலம் கனியும்
தீப் பொறி போதும் காடோன்று சாம்பல் ஆக
உன்னில் ஊக்கம் போதும் கடமைகள் நிறைவேறி போக
உள்ளத்தில் உள்ள உறுதி உடலெங்கும் பாய்சிடு குருதி
துணிந்து செயல்ப்படு துயரெல்லாம் பறந்து போகும் பனி
உதிக்கும் சூரியன் என்றும் உயிரற்று போவதில்லை
இருள் சூழ்ந்த போதிலும் தோன்றிடும் மறுநாள் காலை
ஒரு விதை முளைத்து பல கனியை தரும் மரம்
இமையமாய் உருவேடுத்து செய்திடு அறம்
காற்றை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
முட்டி முளைத்து முன்னேறு உனக்கு தடையில்லை
பற்றிப் படரி எட்டிப்பிடி சிகரம் தூரமில்லை
நெஞ்சில் உரமிருந்தால் தோல்வியில்லை
வெற்றி முரசு முழங்க நெற்றி வேர்வை சிந்து
சற்று பொறுத்தது போதும் துள்ளி எழு
இறுதி சொட்டு ரத்தம் முடியும் வரை
தோற்று போகதே காலம் கனியும் வரை