பெண்மை

பிரபஞ்சத்தின் ஈர்ப்புவிசை..
அவள் கண்விழி காந்தம்!
கார்காலத்தின் பனித்துளி..
அவளது பால் கன்னம்!
புயல் ஓய்ந்தபின் தென்றல்..
அவளின் மூச்சுக்காற்று!
காலத்தின் பொன்னூஞ்சல்..
கண்மணியின் கருங்கூந்தல்!
புதிதாய் பூத்த மலர்கள்..
தேன் சிந்தும் அவளின் புன்னகை!
தத்தித்தாவும் மான்குட்டி..
பேதையின் பேரிடை!
ஆடிவரும் அழகு ரதம்..
நடைபயிலும் குழந்தையின் கால்களாய்!
மேகத்தில் ஒரு பாலாடை..
என் வெண்ணிலவின் தாவணி!
அன்னையின் தாலாட்டு..
அவளின் வாய்மொழிக் கவிதை!
தவங்கள் ஆயிரம் வேண்டும்..
பெண்ணாய் பிறப்பதற்கு.
தாய்மை போற்றும் பெண்ணைவிட
வேறு பிறப்பு எதற்கு?

எழுதியவர் : நந்தினி பிரதீவ் (13-May-15, 10:29 am)
சேர்த்தது : நந்தினி பிரதிவ்
Tanglish : penmai
பார்வை : 458

மேலே