காணாமல்போனவர்கள்

என்

கட்டளைக்கு செவிமடுக்கும் தந்தை,

கண் அசைவிற்கு கூட காரணம் தேடும் தாய்,

நான் அழுதால் உடன் அழும் அக்கா,

என்னை தூங்க வைக்க தன் தூக்கம் தொலைக்கும் பாட்டி,

என்னுடன் இணைந்து நடைபயலும் தாத்தா,

எங்கே போயினர் இத்துனை பேரும்?

காலத்தின் சுழற்சியில்

காணாமல்போன இவர்களை

தேடுகிறேன் நான் கண்ணீருடன் …

எழுதியவர் : chelvamuthtamil (13-May-15, 5:10 pm)
பார்வை : 66

மேலே