மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம் - போட்டிக் கவிதை

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச் செல்வம் குவியும்

மாயத் தோற்ற மளிக்கும்
இந்தக் காட்சியின் பின்னே
வேயப் பட்ட கேள்விகள் யாது?

மனச்சாட்சி கொன்றார் முதல்
தன்னைக் கொன்றார் பின்
பிணம் பெற்ற பணத்தில்
பெறும் பயனே என்ன?

மானம் கெட்டவர் முழுதும்
மதியிழந்தோரே இவர்க்கு
மேதியில் கிடைக்கும் புகழ்
வீதியில் கல்லடியாய் மாறும்

பிணம் தின்னும் கழுகாய்
பணம் பண்ணும் யாவரும்
மனம் தன்னில் மருங்கி
தினம் நொருங்கி களைப்பர்

மானங் கெட்டோர் மமதையும்
மதியிழந்தோர் புகழும் கண்டு
மலைத்திடல் வேண்டா அது
நிலைத்திடாது நீண்ட நாள்!

எழுதியவர் : முரளி (14-May-15, 10:38 am)
பார்வை : 179

மேலே