அந்த காலம்

நிலா முற்றம் ..
தட்டினிலே சோற்று பருக்கைகள் ..
நினைவுகள் பின்னோக்கி ...
உறவுகள் ஒன்று கூடி உண்ட
காலம் எங்கே ?

மழை நீர் தெருக்களில்
காகித கப்பல் விட்டு அதை துரத்தி பிடித்து
விளையாடிய கால ம் எங்கே ?

காலனாவிற்கு நான்கு கமர்கட்டு வாங்கி
காக்காய் கடி கடித்து தின்ற
கால ம் எங்கே ?

வயல் வெளி நடுவில் குல தெய்வத்திற்கு
பொங்கலிட்டு கூடி மகிழ்ந்த
காலம் எங்கே ?

மாலை நேரங்களில் திண்ணையில்
அமர்ந்து திருடன் போலீஸ் விளையாடிய
காலம் எங்கே ?

பாட்டி கை பக்குவத்தில் பலகாரம் உண்டு
பின் அவள் மடியில் படுத்துறங்கிய
காலம் எங்கே ?

இன்றும் வாரிசுகள் என் மடிமீது ..
ஆனால் அத்தனையும் இல்லாமல் ....

எழுதியவர் : சாருமதி (14-May-15, 1:12 pm)
Tanglish : antha kaalam
பார்வை : 119

மேலே