மழை

மழை
"""""""""
எங்கையாவது ஒரு வழிபாட்டில்
விழிமூடிய பிரார்த்தனையில்
இவை நடந்திருக்கலாம்!

வெய்யிலில் வெடித்த பூமி
இன்று உற்காசமாய்!

கொட்டிச் சிந்திய சில்லறையாய்
..மழை நிலம் எங்கும்
பூத்திருந்தது!

சொ""என்ற பெய்த அடைமழையில்,
பூச்சுக்கள் கலைந்து"""
நித்திரை விட்டு எழுந்த இளம்மங்கையாய்"""
நகரம்!

சுறுட்டிக்கட்டிய குடையும்
இன்று குளிக்க ஆசைப்பட்டது!

அடுக்குமாடி வீட்டுக்குழந்தைகளுக்கு
இவை கனவானாலும்"""

குடிசைக்குழந்தைகளால்
காகிதக்கப்பல்
வெள்ளோட்டம் விடப்படுகின்றன!

ஓடி ஒதுங்க தாள்வாரங்களும்
வரவேற்கின்றன!

நிரம்பி வழிந்த பேரூந்தின்
அவசர நிறுத்தத்தில்
அடித்த வெள்ளநீரில்,

ஓட்டுனர் இலவசமாக
புதிய சாபங்களை வாங்கியிருந்தார்!

மொட்டைமாடியில்
தூங்கியிருந்த ,
வடகமும், செத்தலும்,
அம்மாவின் அவசர அணைப்பில்
திடுக்கிட்டு எழந்தன!

இதுவரை வெம்மையில் குளித்து
கொடியில் தோங்கிய ஆடைகள்,
மழையில் முகம்கழுவ
நினைக்கையில்,
அவசரமாக இடம்பெயரப்பட்டன!


குடிசை வீட.டில் ஒழுக்கு
வீரியத்துடன் விஸ்தரிக்கப்பட்டபோது,
பழைய பாத்திரங்கள்
உதவிக்கு வந்தன!

ஒற்றை குடையில்
நெருக்கமான உறவின்,
இளமை சுமந்த மூச்சுக்காற்றுகள்,
தூவானம் விழுந்தும்"""
வேற்கின்றன!

எதோ ஒரு மலைக்கிராமத்தில்
மண் சரிவில் !
மயானம் அவசியமில்லாமல்
போனது!


பல நாட்களாக பூமியை
மறந்திருந்த மழை
பல அசொளகரியங்களை"""
தந்தாலும் இன்று
விஜயம் செய்திருப்பது
வரவேற்கதக்கது!

லாஷிகா
""""""""""""

எழுதியவர் : லவன் டென்மார்க் (15-May-15, 2:13 am)
Tanglish : mazhai
பார்வை : 112

மேலே