மனிதம்

சாம்பல் குருவியொன்றும்
அணிலொன்றும்
சந்தித்துக்கொண்டன...

அதுவொரு
உணவுத்தேடலுக்கான
பொழுது...

இலைகளில்
பரிமாறப்பட்டிருந்த உணவை
இரண்டும்
பகிர்ந்து கொண்டன...

மனிதனொருவன்
வந்தான்
இரண்டையும்
விரட்டினான்...

அவ்வுணவு
காகத்திற்கு
படைக்கப்பட்டதாம் ?
----------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (15-May-15, 9:28 am)
Tanglish : manitham
பார்வை : 661

மேலே