மனிதனே நீ மனிதனா

..."" மனிதனே ?? நீ மனிதனா !! ""...

மனிதனே எண்ணியதுண்டா
ஒருநாள் ஒருமுறையேனும்
இல்லாதோருக்கு உதவியே
இன்பங்கள் நீ பெற்றதுண்டா
இனிமையின் முகம்காட்டி
சொந்தங்கள் சேர்த்ததுண்டா !!!

சொல்லாமல் மறைத்துவிட்ட
பொல்லாஎண்ணம் எத்துனை
உன் இல்லாத குணங்களை
இருப்பதாய் காட்டிக்கொண்டு
பொய்யாகவே வாழ்ந்திடும்
இந்த வன்மங்கள் எதற்கு !!!

ஏற்றங்களும் தாழ்வுகளும்
வேற்றுமையும் விரோதமும்
பொறாமை பேராசைவிட்டு
மனிதமுள்ள மனிதனாய்
வாழ்ந்திட நாம் முயற்சித்தே
வழிமுறையை அமைப்போம் !!!

பூமி வந்ததும் ஒருமுறைதான்
வாழ்வதுமிங்கு ஒருமுறைதான்
பிறந்தது மனிதனாயென்றால்
மனித(மா)னாய் வாழ கடினமென்ன
நீ உணர்ந்திடு உண்மை புரிந்திடு
உயிர்களிடம் அன்பு செலுத்திடு !!!

இருக்குமிடம் இழந்துவிட்டு
இறந்துவிடும் வேளையிலே
எதுவுமில்லையிங்கு நம்மோடு
சேர்த்தேதான் எடுத்துச்செல்ல
மனிதத்தோடு உதவிசெய்த
உருவமில்லா நன்மைதவிர !!!

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீத்(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீத்(எ)சகூருதீன்.. (16-May-15, 11:34 am)
பார்வை : 224

மேலே