நீ வருவாய் என நான் இருந்தேன்

அன்றொரு நாள்
எனைக்
கடவுள் என்றாய்..
முன்பொரு நாள்
உன்னைப்
பிரிவதில்லை என்றாய்..
ஆரம்ப நாள் ஒன்றில்
உன்னை எப்படி
அழைக்க என்றாய்..

வரிசை பின்னால்
போனாலும்
வரிசையில் பின்னால்
போனாலும்
உன் காதல்
கோடையிலும் துளிகள் தான்
என்றபடியே,
இழை பின்னிய
நுண்ணிய
நுட்பக் கவிதையாய்
உருளத் தொடங்குகிறாய்,
புல்லுக்குள் விழுவதற்கு
முன்னாலும் பெருங்காட்டு
துளி ஒன்றாய்..

கவிஜி

எழுதியவர் : கவிஜி (16-May-15, 11:33 am)
பார்வை : 341

மேலே