உயிர்களின் வலி யாரே அறிவார்

இரண்டு பேரும் காதல்
வேண்டாம் என்றோம் !
என்ன சொல்லி என்ன
மனம் கேட்கவா போகிறது ?
யார் இருக்கிறார்
சொல்லி அழ ?
வானம் திறந்து கிடக்கிறது
வாசல் வேர்த்து பார்க்கிறது
இன்னொரு முறை
காலம் பின்னோக்கி நகராதா
அங்கு நீயும் நானும்
நிலவும் சூரியனாய் இருக்கலாமே
காலம் கல்லறை போல
மூடிவிட்டால் திறக்காது !
நான் இறைந்து கிடக்கிறேன்
அள்ளிச் செல்ல ஆள் இல்லா
நட்சத்திர சிதறலாய்
மனமென்னும் ஆகாய வீதியில் ..
எல்லொருக்கும் அவரவர்
வேலை இருக்கிறது .
இரண்டு உயிர்களின் வலி
யாரே அறிவார் ?
இறந்து போகக் கூட ஆசைதான்
என்ன செய்ய நினைவுகள் மறுக்கிறது
வாழ ஆசைப்பட்டால்
வாழ்க்கை துரத்துகிறது
இறைவன் மேல் கோபம் வருகிறது
எங்கு இருக்கிறான் சொல்லுங்களேன்