பாவத்தின் சம்பளம் முத்தம்

என் தாயின் உதிரத்தை உண்டு பிறந்துள்ளேன்
என் தந்தையின் வியர்வைகளை உரிந்து உடல் வளர்த்துள்ளேன்
என் உடன்பிறப்புகளின் சிறுசிறு ஆசைகளை கொன்று வந்துள்ளேன்

தினமும் காலையில் நான் எழுந்தவுடன் தாயின் போராட்டம் ஆரம்பமாகும்
என்னை குளிப்பாட்டி ,உணவு சமைத்து,
உடை கொடுத்து அலங்கரிக்க பம்பரமாய் சுற்றுவாள்
பாசமும் பரிவும் உள்ள அந்த உணவினை
பிடிக்கவில்லை என உதறி தள்ளுவேன்
கன நிமிடத்தில் வேறு உணவு சமைப்பாள்
மெத்தைகளை தவிர்த்து அவள் மடியில் உறங்குவேன்
வலிகளை பொருத்து புன்னகை புரிவாள்

நான் வண்ண வண்ண சட்டைகளை அணிய
என் தந்தை வாழ்நாளில் பெருவாரியான நாட்களில்
காக்கி சட்டையையும் கை வைத்த பனியனியும் தான் அணிந்திருந்தார்

வாயை கட்டி வயிற்றை கட்டி எனக்காக தியாகம் செய்த
அவர்கள் வாழ்கையை கூட மதிக்காமல் ஊதாரியாய் செலவிழுத்தேன்

தான் படிக்கவில்லை என்பதால் என் படிப்பிற்காக எதையும் செய்தார்கள்
நானோ படிக்க எதையும் செய்யவில்லை....?

மழைக்கு கூட சமையலறை பக்கம் ஒதுங்கதாவன்
சாப்பிட தட்டை கூட அலம்பதாவன்,
துணிகளை துவைக்க தெரியாதவன் ...
ஏன் என் ஆடைகளின் இருப்பிடம் கூட அறியாதவன்

இவ்வளுவும் என் பாவங்கள் என்பதை கூட அறியாதவன்

என் பாவத்தின் சம்பளம் என்னவோ.?

நான் என் சொந்த காலில் நிற்க என்னை தாங்கி பிடித்தவர்கள்
எனக்கென ஒரு வாழ்கையை வாழ்ந்தவர்கள்
எனக்கென ஒரு துணைவியை அமைத்து ,
இப்பொழுது ஒரு புதிய மேடையை அமைத்தனர்

அன்னை என்ற ஒருத்தியினை அடுத்து ,
தாரம் என்ற இரண்டாமவள் என் பாவங்களை சுமக்க போகிறாள்

மீண்டும் என் அரக்க ராஜாங்கம் ஆரம்பமாகிறது


பிறந்தது முதல் மற்றவரை நம்பியே நான் வாழ்ந்துவந்ததை உணர்கிறேன்

எனக்காக தூக்கம் துளைத்து ,
எனக்காக சமைத்து ,
எனக்காக எனக்காகவே இன்னொரு சகாப்தம் ஆரம்பமாகிறது ..
ஒரு ராஜாவை போல இத்தனை நாள் வாழ்ந்து வந்தேன்

என் தேவதை தோன்றினால்,என் மகள் பிறந்தாள் ..!

அவளை உற்று உற்று நோக்கினேன் ,கண்மணிகளை போல் காத்தேன்
அவள் கன்னங்களை கிள்ளி விளையாடுனேன்
குழல்களை உச்சி முகர்ந்தேன் ,
பாதங்களை பற்றி வருடினேன்
பிஞ்சு விரல்களை பிடித்து நடத்தினேன்

இப்போதெல்லாம்

சமையலறை பக்கம் செல்கிறேன் ,
சாதம் பிசைகிறேன் ,ஊட்டுகிறேன் ,
அவள் ஆடை அறைகளை கூட அலங்கரிக்கிறேன்
அங்குலம் அங்குலமாக அவளை ரசிக்கிறேன்
அக்கறை காட்டுகிறேன் !

இவ்வளவு நாட்கள் என் தாயையும் தாரத்தையும் ஏமாற்றியதை உணர்கிறேன்
அவர்களை கண்ணோடு கண்ணாக காண வெட்கி குனிகிறேன்

அவர்களிடம் மன்னிப்பு கேட்க மனம் துடித்தாலும் ,
என் ​​​​​​​​​​ தன்மானம் விடவில்லை
எனக்கே என்னை காண பிடிக்கவில்லை

அன்று ஒரு நாள் ,ஒரு மாலை பொழுதில் ,
பணி முடித்து வீடு திரும்பினேன் .

என் தேவதை வீட்டு தோட்டத்தில்
வீர விளையாட்டு புரிந்து கொண்டிருந்தாள்.
ஓரிரு அடிகளை தான் வைத்திருப்பேன்,
சற்றே என்னவள் தவறி விழுந்துவிட்டால்

ஒரு பேரிடி என் மேல் விழுவதை போல்
விரைந்து சென்று அவளை தூக்கினேன்

ஒரு சிறு காயத்தை கண்டதும்,
பெரும் போரில் காயப்பட்ட மாவீரனை போல உறுமினேன்

என் கண்மணியை தனியாக விட்டுவிட்டு 'அங்கே என்ன செய்கிறீர்கள்'
என அனைவரையும் எரிந்து விழுந்தேன்
கனலாய் கொதித்தேன்
எரிமலையாய் வெடித்தேன்
மெல்ல என் மகளை தட்டி கொடுத்து தூக்கி நிறுத்தினேன்...
என் கோவத்தால் தாயும் தாரமும் பயந்து நின்றார்கள்.....

என்னவள் ஒரு முத்தமிட்டு மீண்டும் விளையாட கிளம்பினால்...

இந்த சிறு விஷயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என அவர்கள் என்னை நோக்க , கூனி குறிகினேன்

.
.
.

இது தான் என் பாவத்தை கழுவருத்த கணம்

என் பாவத்தின் சம்பளம் .......முத்தம்!

எழுதியவர் : tkscribbles (16-May-15, 12:31 pm)
பார்வை : 1584

மேலே