உயிரோட்டம் - 12205

குழந்தைக்கு
ஸ்கூல் திறந்தது
பொம்மைக்கு
போரடித்தது.....!

விளையாடியது யார்?
விளையாட உதவியது யார்?

பள்ளிக்கு செல்லுமுன்
குழந்தை கொடுத்து விட்டுப் போன
சாவி வேலை செய்ய......

பக்கத்தில் நகர்ந்து வந்த பொம்மையை
எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன்........

சிரித்தது பொம்மை
எனைப் பார்த்து.....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (16-May-15, 7:59 pm)
பார்வை : 47

மேலே