விதைக்கத் தேவை நாலுமா மனசு

அண்ணேய்.... காலை வணக்கம்
சொல்ல...
தம்ப்பீய்... யென சத்தமிட்டு
ஏற்றுக் கொண்டதாய்
வரப்பு வெட்டிக்கொண்டிருப்பார்....!

மதியப் பொழுதுகளில்
கருவாட்டுக் குழம்போடு...
இப்பொழுதெல்லாம் முட்டையும்
சேர்ந்துவிட்டிருந்தது...

தென்னைக்கு மருந்து கட்டுவது
எப்படியென அவரும்....
மீதேன் அபாயம் எவ்வாறு என
நானும்..முட்டையோடும்
வத்தலோடும் பரிமாறிக் கொள்வதற்கு

சேவைக் கட்டணங்கள்
எதுவுமில்லை...

காற்று ஈரப்பத
விளக்கங்களுக்குப் பின்னால்
நான் கை காட்டும்முன்பே
கருவேலமரங்கள்
வெட்டக் கிளம்பிவிடுகிறார் அவர்...

குறுவைக்கு கடன்மறுத்த
கதைசொல்லி அழுது முடிக்கையில்..
வங்கி மேலாளரின்
கல்வித்தகுதி ... இளநிலை விவசாயம்
என்பதை
இணையம் சொன்னது...

பச்சைத் துண்டுகளோடு
சாலையில் விவாதிப்பதைவிட...
சிவப்புத் துண்டுகட்டி
விதைத்துவிடத் தேவை...யாகியிருக்கிறது
இன்னும் நாலு வெள்ளந்தி மனசு....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (16-May-15, 7:35 pm)
பார்வை : 107

மேலே