ஒரு நாள் வந்திட மாட்டாரோ

எழுத்துகளால் எழுத முடியாத கவிதை அந்த பெயர்
மனதில் வரையாமல் வரையப்பட்ட ஓவியம் - அவர்
உலகிற்கே ஓர் உதாரணமாம் - அவரே
கடவுளின் மறு அவதாரமாம் - அவர்
மீண்டும் ஒரு முறை இப்பூவுலகில் பூதிடுவாரானால்
விண்ணுலகமும் விழி திறந்து பார்திடுமாம்
மண்ணுலகமும் மணிமகுடம் சூட்டிடுமாம்
கவிப்பாடும் கருங்குயிலும் கவிமாலை அன்னிவிக்குமாம்
அம்மைதி அடங்கிய ஆழ்கடலும் அலை நடனம் ஆடிடுமாம்
வீரம், விவேகம் ,ஆனந்தம் ,அன்பு ,எழுச்சி - ஆகிய
அனைத்தும் பாரெங்கும் பரவிடும்மாம் - அவர்
மீண்டும் இப்பூவுலகில் தன் பாதத்தை பதித்திடுவாரானால்
விவேகமும் ,ஆனந்தமும் நிறைந்தவரே - எங்கள்
மனதில் ஓவியமாய் மாறியவரே - எங்கள்
விவேகானந்தரே எப்பொழுது இப்பூவுலகில் மீண்டும் பூதிடுவீரோ ...........?

-ர.கீர்த்தனா

எழுதியவர் : ர.கீர்த்தனா (16-May-15, 8:03 pm)
பார்வை : 90

மேலே