ஒரு நாள் மட்டும்
குளியல் நாள்
உண்ணும் நாள்
பேசும் நாள்
பாடும் நாள்
எனச் சிறப்பான
நாளெல்லாம் ஏதுமிலை
மனிதன்
அவற்றை மறந்தும்
மறப்பதில்லை. . . . .
அன்னைக்கு ஒரு நாள்
தந்தைக்கு ஒரு நாள்
ஆசானுக்கும் ஒரு நாள்
அன்புக்கும் ஒரு நாள்
என்றே தனித் தனியாய்
பகுத்துள்ளான்
ஏனெனில்
அவர்களைப்
பிற 363 நாள்கள்
எவரும் நினைப்பதில்லை !