தாவணி தேவதைகள் தரிசனம்
![](https://eluthu.com/images/loading.gif)
நாகரீக நகரத்தில்
பெண்வடிவ பெண்ணைக் காண
பெருந்தவம் புரிய வேண்டும்
அதுவும் ஐ.டி துறையில்
அய்யகோ....கொடுமை
மாராப்பில்லா டாப்சும்
கையில்லா டீஷர்ட்டும்
தொடை கவ்வும் லெக்கின்சும்
இடுப்பிறுக்கும் ஜீன்சும்
பறக்க விட்ட கூந்தலும்
ஆண்ட்டியான அம்மணிகளே
சுடிதார் தரிசனம்.....
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையென
புதிதில் பார்த்து
புலகாங்கிதம் அடைந்தாலும்
போக...போக
ச்...சீ......
இந்த பழம் புளித்தது
பாவாடை தாவணி
பதுமைகள்
யாங்கனுமே காணோம்....
ஜவுளிக் கடை
பொம்மை வடிவில் கூட
ஆடி மாதம் எப்போ வரும்
கங்கை அம்மன் கோயிலில்
சாகை வார்த்து
செடல் போடும்
உற்சவத்தில்
என்னரும் கிராமத்து
தேவதைகள் தரிசனம் காண
உறுமீன் வருமளவு
காத்திருந்த கொக்காய்.....
ஆடி வந்ததும்
ஆட்டுத்தாடி வைத்த பாசிடம்
கெஞ்சிக் கூத்தாடி
நாலு நாள் லீவு போட்டு
முன் பதிவு கிடைக்காத
ரயிலில் முண்டி அடித்து ஏறி
மூச்சு முட்டி
பூளோக வைகுண்டமென
என் புழுதிக் காற்று பூமிக்கு
பேருவகையுடன் வந்து சேர்ந்தேன்....
அம்மன் கோயில் திருவிழா
கடலில்லா எம் ஊரிலும்
மக்கள் அலை
பால்ய கால நண்பர்களுடன்
படையெடுத்தேன்....
வழி நெடுக
வழி எறிந்தேன்
ம்....கூம்....
என்னரும் கிராம தேவதைகள்
யாவரையும் காணோம்...
எக் கன்னியின் காலிலும்
முத்து வைத்து
சத்தமுடும் கொலுசில்லை
முழம் முழமாய் சூடிய
மல்லி கனகாம்பரம் இல்லை.....
காதோரம் கவிபாடும்
பெரிய குடை விரித்த
ஜிமிக்கி இல்லை...
இரட்டை கிளவியாய்
கல...கல....வென ஜதி பாடும்
கண்ணாடி வளையல் இல்லை....
இறுதியாய் நான் ஏக்கமுடன்
எதிர்பார்த்தப்
பாவாடை தாவணி
பருவச் சிட்டுக்கள்
யாருமே இல்லை....
கண் சுருக்கி காத தூரம் தேடினேன்....
தேடினேன்...தேடினேன்...
ஊரின் எல்லை வரை தேடினேன்....
இங்கும்....சுடிதாரும் , மிடியும்
கோலோச்சிக் கொண்டிருக்கிறது....
இனி பாரதி ராஜா படத்திலும்
பார்க்க முடியாதோ
பாவடை தாவணி சிட்டுக்களை....