தெரு விளக்கும் - நிலவும் - நடைமுறை வாழ்க்கையும் - 12210

நிலவோடு போட்டி போட்டது
தெரு விளக்கு......

தோல்வி பயத்தில்
முகிலில் மறைந்தது நிலா.....

பளிச்சென்று சிரித்து
பரிகசித்தது தெரு விளக்கு.....

இது அறிவா அறியாமையா என
இதைக் கண்ட எனக்கு விளங்க வில்லை....

என் தேவைக்கு இப்போது உதவியது
நிலா அல்ல
தெரு விளக்கு மட்டுமே......

எழுதியவர் : ஹரி (17-May-15, 1:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 79

மேலே