செந்தூரின் ரகசியம்
கந்தா சிவனாரின் காதில் உரைத்ததென்ன?
எந்தனுக்கும் காதில் இயம்பென்றான் - செந்தூரின்
ஆலயத் தொண்டில் அதையுரைத்தான் நீயுங்கேள்
ஆலயத் தொண்டில் அது.
************************************************************************************
கந்தா சுவாமி மலையில் சிவன் காதில் என்ன சொன்னாய்
அதனை எனக்கும் என்காதிலலும் சொல்லென்றேன். அவனோ திருச்செந்தூரில் உரைப்பதாக சொன்னான்
அதன் படியே திருச்செந்துர்ரில் ஆலயத்தின் சுவரில் தொண்டில் (துவாரத்தில்) காதை வைஎன்றான் வைத்தேன்
ஆம்... அவன் அங்கு சொன்னது இங்கு கேட்டது. நீயும் கேட்கலாம்....வா...
இன்றும் செந்தூரில் கோயில் சுவரில் உள்ள தொண்டில் அலை ஒலிக்கிறது
உண்மை வென்றிட வேண்டும்
ஓம்....ஓம்....ஓம்,,,,,,