வேள்வி
வேள்வி
"""""""""""
தலை வழிய!
எண்ணையும்,
சீயாக்காய்,எலும்பிச்சையும்,
பனையோலை சுமந்து வரும்
பங்கு இறச்சிக்கு
காத்திருக்கும்!
முகவரியில்லா தலை
தவறிய வெள்ளாடுகள்
சடலமாக,
சைக்கிள் கரியளில்
தோரணமாய்!
முன்னிரவு தாண்டிய விடியலில்
ஆலயமுன்றளில், பறைமேளம்
போதையேற்ற,
முகம்தெரியா கோபம் வழியும்
மனிதரின்!
கொடும் பசியில்
வரிசையாக வெள்ளாடுகள்
தலை தறிக்கப்படும்!
வயிரவரின் பெயரை சொல்லி
வளர்த்த ஆட்டை நாங்கள்
உண்ணமாட்டோம்"""
என்ற போலிக்கரிசனையில்.
வியாபாரம் கலந்த,
பேரம்பேசல்
நடந்து கொண்டுருக்கும்!
பங்கு பிரித்து,
ரத்தம் வறுத்து,
உண்டு மகிழ்ந்த பின்பு
பாதி போதையில்"""
வீடுபோய் சேரும்
பங்கு இறைச்சி.
பகல் பன்னிரண்டு மணிக்கு!
லாஷிகா
""""""""""""