இளந்தென்றல் காற்றே

நீ உரசிய
இமைகள் வெட்கத்திலே
துடிக்கிறது...
நீ தொட்ட
உடம்பு உதகையிலே
உறைகிறது...
நீ பரவிய
சுவாசம் நடுக்கத்திலே
கலைகிறது...
அள்ளி அணைத்திட
நினைக்கையிலே என்னுள்,
அடங்காமல் செல்கிறாயே...
பூ உரசிய
வண்ணத்துப்பூச்சியாய்...
இனிய இளந்தென்றல் காற்றே...