ஏன்ப்பா எனக்கு மட்டும் எதுமே கேட்க மாட்டேனுது - கற்குவேல் பா
அது
பண்டிகை நாளாக
இருந்திருக்கலாம்
ஆடு
கோழி எல்லாம்
இலையில் ஒன்றுசேர ..
இனிப்புகள்
சேர்ந்தே உணவுகள்
பரிமாறப்பட்டது
அண்ணனை
பின் தொடர்ந்தாள்
பட்டாசுகளை காண ..
அந்த
ஐந்து வயது
அழகு தேவதை ..
பற்றவைத்ததும்
காதுகளை மூடிய
அண்ணனை நோக்கியவள் ..
வெடித்து
முடிந்ததும் விரைந்தாள்
தந்தையை நோக்கி ..
"ஏனப்பா
எனக்கு மட்டும்
எதுமே கேட்க மாட்டேனுது "
என்றவளை
மார்போடு அணைத்து
அவன் கதறியது
அந்த
காது கேளாத
குழந்தைக்கு கேட்டிருந்தாலும் ..
சுவரில்
அறையப்பட்டிருந்த அந்த
கடவுளுக்கு கேட்டிருக்காது ??
-- கற்குவேல் .பா