பெண் சிசு கொலை

கள்ளிப்பால் குடிக்கும் போது
தன் அன்னையை பார்த்து கேட்ட
பிள்ளையின் அழுகுரல்.

பெண் குழந்தை வேண்டாம் என்ற
உன் உறவுகளின் வஞ்ச தீயில்
விழுந்து வாழ்வதை விட பஞ்சு
தீயில் விழுந்து சாவதே அல்லது
வஞ்சகனால் வந்த வலி என்று
நீ நினைத்தாயோ

நீயும் பெண் என்று ஒரு நொடி நினைத்து
பார்களயோ நான் கள்ளிப்பால்
குடிக்கயலே அல்லது

பால் குடி மறவாத உன்னையும் பாலியல்
தொந்தரவு செய்வார்களோ என்ற அச்சத்தில்
என்னை அஸ்தி ஆக்க விரைந்தாயோ அல்லது

படிக்கும் இடத்தில் மற்றவர்களால் கேளிகூத்துக்கு
ஆளாகி கேவலப்படுவாயோ என்று
கேதமாயி போ என்றாயோ அல்லது

ஆடு, மாடு , கோழி போன்ற உயிர்களை புசித்து
அழுத்து போன மனிதர்கள் இப்போது பெண்களின்
உடலை புசிக்க தொடங்கியவர்கள் உன்னையும்
விட்டு வைக்கமாடர்களோ என்ற ஐயத்தில் இறைவனுடன்
என்னை ஐக்கியமாக்க முடிவெடுத்தாயோ அல்லது

வரதட்சனை என்ற பெயரில் பணம் தின்னும்
கழுகிற்கு இரையாகி இறப்பதை விட
பிணம் தின்னும் கழுகுகளுக்கு
இறையாக்க துணிந்தாயோ என்றது !!!

எழுதியவர் : பீமன் (17-May-15, 4:41 pm)
சேர்த்தது : பீமன்
Tanglish : pen sisu kolai
பார்வை : 586

மேலே