கவிப்பேரரசே

கவிப்பேரரசே...!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலைச் சுகி!
காதலில் அழு!
என்றாய் நீ

முதல் இருவரி முழுதாய் முடித்துவிட்டேன்
மூன்றாம் வரியோ முடிக்கவில்லை இன்னும் நான்

ஆமாம்
"அழுது முடிக்கவில்லை"

காதலில் அழு
அது
ஆயுள்வரை நீளமாகும்
ஆறாத தழும்பாகும்
இவ்விருவரி இனைத்து
எனைக் காப்பாற்ற மறந்தாயே

இப்போது
உன் வரியில் என் வரியை புனைந்து
புதுக்கவி எழுதுகிறேன்
உனக்கு போட்டியாக...

எழுதியவர் : மணி அமரன் (18-May-15, 11:17 am)
சேர்த்தது : மணி அமரன்
பார்வை : 242

மேலே